மொரட்டுமுல்ல இரட்டைக் கொலை தொடர்பில் விசேட விசாரணை…

(FASTNEWS | COLOMBO) – பிலியந்தலை – மொரட்டுமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்

கொலைக்கு காரணமாக பேரூந்து வீதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் இடம்பெற்ற முறுகல் நிலையே காரணம் என தெரிய வந்துள்ளது. பலியான நபர் வழக்கொன்ருக்கு சென்று மீளவும் வீடு திரும்புகையிலேயே மொரட்டுமுல்ல பிலியந்தல கொஸ்பெலேன பகுதியில் வைத்து நேற்று(14) காலை 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பலியான சொய்சா வீதியில் வசிக்கும் 47 வயதுடைய குறித்த நபர் ஆமி மஞ்சு என பிரதேசவாசிகளால் அழைக்கப்படுவதோடு, அவரது மகனும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான மற்றைய நபர் 20 வயதுடைய இளைஞன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.