(FASTNEWS|COLOMBO) – மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்குள் நேற்றிரவு(10) தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி ஒன்றுக்காக தயாரிக்கப்பட்ட காரொன்றைப் பரிசோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் மின் ஒழுக்கினால் தீ பரவியுள்ளதாக, மொறட்டுவை தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தீயினால் பொறியியல் பீடத்தின் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.