மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் மொஹிதீன் பள்ளிவாசல் மயானத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு – சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியான மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்களை காத்தான்குடி மொஹிதீன் பள்ளிவாசல் மயானத்தில் புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் குறித்த உடற்பாகங்களை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு அன்று சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரகசியமாக புதைக்கப்பட்டிருந்தது.

பின்னர் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதுடன் மீண்டும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.