மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் உலகக் கிண்ண 20 கிரிக்கெட்டின் தலைமைக்காக ஷஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். அது இதற்கு முன்னர் தலைமைக்கு பெயரிடப்பட்டிருந்த இங்கிலாந்தின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் இயன் மோர்கன் உபாதைக்கு உள்ளாகியமையினாலேயே ஆகும்.
உலக பதினொருவர் அணியில் உள்ள சாகிப் அல் ஹசன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் போட்டியில் பங்கேற்கமாட்டார் என நேற்று(29) அறிவித்திருந்தார். குறித்த போட்டியானது லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.
உலக பதினொருவர் அணியில், T20 உலக சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்ற நாடுகளின் வீரர்களான ஷஹித் அப்ரிடி, சொஹைப் மலிக் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.