மோசமான செயலால் ICC கோஹ்லி’க்கு அபராதம்…

மைதானத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பந்தை தூக்கியெறிந்த விராட் கோஹ்லிக்கு போட்டியின் 25% ஊதியத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதலில் மழை குறுக்கீடு காரணமாக போட்டி தாமதமானது, பின் சிறிது நேர ஆட்டத்துக்கு பின் போதிய வெளிச்சமின்மை என நடுவர்கள் போட்டியை நிறுத்திய நிலையில் விராட் கோஹ்லி களத்தில் இருந்த நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின் மூன்றாவது நடுவர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சென்று வாதம் செய்தார், இது எதுவும் பலன் அளிக்காததால் பந்தை வேகமாக தூக்கியெறிந்துவிட்டு கோஹ்லி சென்றுவிட்டார்.

கோஹ்லியின் இந்த மோசமான செயல் குறித்து ஐசிசி-யிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ள ஐசிசி போட்டியின் 25% ஊதியத்தை அபராதமாக செலுத்த உத்தரவிட்டுள்ளது.

 

#reehmsa