மோடியாக மாறிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் – யுவராஜ் சிங்

அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடத்தை நிறைவு செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வெல்பி (வீடியோ+செல்பி=வெல்பி) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

டப்ஸ்மேஷில் பல பிரபலங்கள் தங்கள் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி வரும் நிலையில் யுவராஜ் சிங் பிரதமர் மோடியின் சிறிய உரைக்கு நடித்து, அதை தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பேஸ்புக்கில் இதை 27 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.  450 பேர் ஷேர் செய்துள்ளனர். 900 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த மோடி, ”கிரிக்கெட் களத்திலும், கிரிக்கெட் களத்திற்கு வெளியிலும் உங்கள் திறமை அபாரமாக உள்ளது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் இதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.