மோடியின் ஆட்சியில் இலங்கை சிறையில் இருந்து 900 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக, திருச்சியில் பாரதிய ஜனதா ஓராண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்‌ பங்கேற்று சாதனைகளை விளக்கும் கையேட்டையும் வெளியிட்டு வைத்தார்.