மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு

(FASTNEWS |COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்ததுடன் நேற்று மோடியுடன் தொலைபேசியிலும் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.