மோடியின் வருகையினை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் ஞாயிறன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையினை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 09ம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக பாதை, பேலியொகொடை மேம்பாலம், பொரளை ஊடாக கனத்தை சுற்றுவட்டம் வரையும், பொரளை டி.எஸ் சேனநாயாகக்க சந்தி முதல் காலி வீதி வரையும் இந்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்காரணமாக குறித்த காலப்பகுதியினுள் விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.