இந்திய பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 25, 26ம் திகதிகளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதற்கு பிறகு மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்கிறார். எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை இந்த சந்திப்பு பற்றி உறுதி செய்யப்படாமல் இருந்தது. இப்போது மோடி, டொனால்டு டிரம்ப்பை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப்பை சந்திக்கும் போது, பிரதமர் மோடி இரு நாடுகளுக்கும் உள்ள உறவு மேம்பாடு பற்றியும், வர்த்தக மேம்பாடு பற்றியும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உலக சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் பேச உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.