மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது தலைகவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று(05) உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மோட்டார் சைக்கிள ஓட்டுபவர் மற்றும் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் மற்றும் கார்களில் பயணிப்போர் அனைவரும் ஆசன பட்டி கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், ஆசன பட்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தலைகவசம் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து தமிழக அரசு எதிர்வரும் 27ம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய பொலிஸ் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.