மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழப்பு…

மாதம்பே – குளியாப்பிட்டிய பிரதான வீதியில் உடுபத்தாவ பிரதேசத்தில் நேற்றிரவு(24) ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மாதம்பே நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே பக்கத்தில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் இருந்த மரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 19 வயதுடைய புத்தி சந்திமால், டிலான் சன்சில மற்றும் 18 வயதுடைய இசிரி சந்திரசிரி ஆகிய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.