மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு இன்று சுமார் 3 ஆயிரம் பேர் வரையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும், சான்றிதழ்களை பெறுவதற்காக பெருந் தொகையான நபர்கள் நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் ஒன்று கூடியதால் அங்கு எதிர்பாராத விதத்தில் பதற்றநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.