2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வரையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
நேற்று(09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இவ்வருடம் வாகன வருமான உத்தரவு பத்திரம் பெற்றவர்களுக்கு இது நடைமுறைபடுத்தப்படவில்லை எனவும் அடுத்த வருடம் முதல் இவ்வரி உத்தியோகபூர்வமாக அறிவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.