மோதரை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
இன்று(10) மதியம் 03 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட நான்கு ஆண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.