மோதரை, அளுத்மாவத்தை மாதம்பிட்டிய சந்தியில் இருந்து பஞ்சானந்த மாவத்தை வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று(15) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி அதிகாலை 05.00 மணி வரையில் குறித்த வீதி தற்காலிகமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி கொழும்பில் இருந்து செல்லும் வாகனங்கள் மாதம்பிட்டிய வீதியூடாக மோதரை பாதையின் அளுத்மாவத்தைக்கு நுழைய முடியும் எனவும், கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் பஞ்சானந்த மாவத்தை ஊடாக மாதம்பிட்டிய வீதியூடாக அளுத்மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.