மோதல் ஒன்றின் காரணமாக 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பேருவளை – உமயிசரா மத்திய மகா வித்தியாலயம் இரண்டு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவரின் மரணம் மற்றும் சந்தேகநபரான மாணவரின் கைது ஆகியவற்றை கருத்திற் கொண்டு பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பேருவளை வலயக் கல்வி காரியலயம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் 15 வயதுடைய மாணவர் பேருவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.