தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பத்திரிகை நிறுவனத்தின் மீது 1 பில்லியன் மற்றும் 500 மில்லியன் இழப்பீடு கோரி தொடுக்கப்பட்டிருந்த நஷ்ட வழக்குகள் இரண்டே இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் குறித்த இரண்டு வழக்குகளையும் இன்று(07) இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.