(FASTNEWS | COLOMBO) – கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் யட்டிநுவர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான துஷித வெலகெதரவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி தன்னை தாக்கியதாக தெரிவித்து துஷித வெலகெதர, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.