வவுனியா குட்செட் வீதியில் யன்னல் வழியாக கைப்பை ஒன்றில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த திருடர்கள் வீட்டு அறை ஒன்றின் யன்னலைத் திறந்து அதனூடாக தடி விட்டு அறைக்குள் இருந்த கைப்பையை எடுத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற திருட்டுச் சம்பவம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வேறொரு பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்