யாசகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது…

புகையிரதங்களில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் யாசகம் கேட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களில் ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு – கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரதங்களில் வர்த்தகத்தில் ஈடுபடல், யாசகம் கேட்டல் போன்ற செயற்பாடுகள், கடந்த முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.