யாசிக்கும் மற்றும் பேரூந்துகளில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கான தண்டப்பணம் அதிகரிப்பு..

பேரூந்துகளில் யாசகம் கோரல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிரான குறைந்தபட்ச அபராதத்தை 5000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வாகன போக்குவரத்துச் சட்டம் தற்போது திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புதிய அபராத சட்டத்தை அதில் உள்வாங்க வேண்டும் என போக்குவரத்து திணைக்கள ஆணையாளரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏழு வீதி விதி மீறல்களுக்கு எதிரான அபராதத்தை 25000 ரூபாவாக அதிகரிப்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.