இம்முறை நடைபெற்று வரும் பத்தாவது ஐபிஎல் தொடர் குறித்து பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 10வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. கோஹ்லி, கெயில், டிவிலியர்ஸ், வாட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதனால் பிளே ஆப் சுற்றுக்கான தகுதியையும் இழந்தது. இந்நிலையில் இது குறித்து கோஹ்லி கூறுகையில்,
“..யானைக்கும் அடி சறுக்கும் என சொல்வார்கள். அது இன்று உண்மையாகிவிட்டது. சில நேரங்களில் தோல்வியை சகித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அதை தாண்டி அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த முடியும். நடத்ததை பார்த்தால் சிரிப்பதை தவிர, வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை…” என கூறியுள்ளார்.