யான் ஓயா வான் கதவுகள் அனைத்தும் இன்று(28) காலை முதல் திறப்பு…

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களது மழையுடன் கூடிய காலநிலையானது இன்று(28) முதல் குறைவடையும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மதியம் 02 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் எனவும் குறித்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், யான் ஓயாவின் அனைத்து வான் கதவுகளும் இன்று(28) காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.