யால தேசியப்பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை 600 ஆக அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
தற்பொழுது நாளாந்தம் அனுமதிக்கப்படும் ஜீப் வாகனங்களின் எண்ணிக்கை காலை வேளைகளில் 250 ஆகவும், மாலை வேளையில் 250 ஆகவும் 500 வாகனங்களுக்கான அனுமதியே வழங்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதன்காரணமாக கடற்றொழில் நீரியல்வளங்கல் அமைச்சரும் மகாவலி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீர , ஜனாதிபதி மற்றும் பிரதமர் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.