யாழ் நல்லூரில் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் சரத் ஹேமச்சந்திரவின் மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொண்டவர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவருக்கு உப பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கியுள்ளார். அத்துடன் அவர் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையை பொறுப்பேற்கும் படி பணிக்கப்பட்டுள்ளார்.