யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் அங்கு பொது மக்களுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி நேற்று(01) யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
“யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் முழுமையாக கைப்பற்றப் போகிறது என கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. யாழ். கோட்டையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
கோட்டைக்குள் இராணுவம் இருப்பது தான் வழக்கம். ஆனால், பொதுமக்கள் எந்த நேரத்திலும் கோட்டைக்குள் வரலாம். அதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
R.Rishma