யாழ், சாவகச்சேரி – மரவன்புலவு மத்திய பகுதியில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணைகளானது பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்றைய தினம்(30) கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு குறித்த வெடிப்பொருள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது குறித்து இதுவரையிலும் அறியப்படவில்லை.
அதேவேளை, சந்தேகத்திற்குரியவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தாரா? இல்லையா? என்பது குறித்தும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும்,யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இவ்வாறான வெடிப்பொருட்கள் மீட்கப்படுவது பொதுவான நிலைமை என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என நேற்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்தார்.