யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 31 பேர் இன்று(13) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தங்கச்சிமடம் மற்றும் தேசாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தாம் கைது செய்யப்பட்டு 2 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை விடுதலை செய்யுமாறும் தமது படகுகளை விடுவிக்குமாறும் கோரியே இவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துாதுவரிடம் மீனவர்கள் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.