யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையம் குறித்து ஆராய மூன்று இந்திய அதிகாரிகளை கொண்ட குழுவினர் இன்று(21) யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தின் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்த ஆய்வுகள் தொடர்பிலான அறிக்கை இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.