யாழ்.பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி.

யாழ்.பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசு, இந்திய அரசிடம் உதவி கோரியுள்ளதாக அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்துள்ள இந்திய அரசாங்கத்தின் வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனை கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் இந்தியாவிற்கு இடையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு திட்டமே பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தியாகும்.

இந்நிலையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக இலங்கை அமைச்சரவை இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் முடிவு ஒன்றை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.