யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் விடுதலை கோரி ஆரம்பித்த சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நாளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கித் தந்திருப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதத்தை இடைநிறுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் மற்றும் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு மாணவர்கள் கோரியிருந்தனர் எனினும், அது குறித்து எந்த பதிலும் கிடைக்காததையடுத்து மாணவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.