யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்…

யாழ். பல்கலைக்கழகத்தின் பீடங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி காலை தமது விடுதிகளுக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்ததையடுத்து பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் கடந்த 31ம் திகதி முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.