யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை குறித்து இன்று கொழும்பில் கண்டனப் போராட்டம்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து இன்று(24) பிற்பகல் 4 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது.

சிவில் அமைப்புக்களும் ஊடக அமைப்புக்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேற்குறித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு நீதிக்காக குரல் எழுப்புமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை வடக்கில் நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1.1