யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுப்பு…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று(01) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் வணிக பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது