சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.
இன்று(14) முற்பகல் 10.30 அளவில் இந்தப் போராட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்தப் போராட்டத்தில், சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் அளவில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் பிராந்திய அலுவலக பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோரிடம் கோரிக்கை கடிதங்களை மாணவ பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.
இதையடுத்து, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் வரை பேரணியாக செல்லும் மாணவர்கள், அங்கும் குறித்த கடிதத்தின் பிரதியை கையளிக்க உள்ளனர்.