(FASTNEWS|COLOMBO)- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(22) முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
மேலும், மாணவர்களின் நலன்சார் விடயங்களில் பல்கலைக்கழக நிர்வாகம் தலையீடு செய்து உடன் தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை செயற்படுத்தும் வரை வகுப்புப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.