யாழ்.பல்கலைக்கழக மோதல் – காலவரையறை இன்றி விஞ்ஞான பீடம் மூடப்பட்டது

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானப்பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞானப்பீடம் காலவரையறையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது.

இத்தகவலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த மோதல் நிலையை அடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

மேலும் விடுதிகளில் உள்ள விஞ்ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ் புலனாய்வுப்பிரிவினரின் துணையுடன் சிங்கள , தமிழ் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ் மாணவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.