யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி கோப்பாய் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட மனுவுக்கான தீர்ப்பு நாளை (23) வழங்கப்படவுள்ளதாக யாழ். மஜிஸ்ட்ரேட் எஸ்.சதீஸ்கரன் அறிவித்துள்ளார்.
இந்த தடை உத்தரவை பிறப்பிப்பதற்குத் தேவையான நியாயங்களை முறையாக முன்வைக்குமாறு மஜிஸ்ட்ரேட் நீதிபதி கோப்பாய் பொலிஸாரைக் கேட்டுள்ளனர்.
நவம்பர் 27 ஆம் திகதி கொண்டாடப்படும் மாவீரர் தின நிகழ்வில், யாழ். பல்கலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் போது புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் என்பவற்றை ஏந்தியவாறு செயற்படுகின்றதாக பொலிஸார் முறைப்பாடு அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.