யாழ். பொலிசாரின் விடுமுறைகள் இரத்து…

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளால் ஆவா என அழைக்கப்படும் குழுவைச் சேர்ந்த 6 பேர் நேற்று(16) கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 6 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிசாரின் விடுமுறை , வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் உத்தரவிற்கு அமைவாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

 

#rizmira