யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பொலிஸாருக்கும் இன்று(14) பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று(14) இடம்பெற்ற போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த படுகொலை சம்பவம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(rizmira)