யாழ்ப்பாணம் – நாவற்குழி புகையித வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்று புனரமைக்கப்படவுள்ளமையால் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரையிலான புகையிர சேவைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக யாழ் மத்திய புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகளின் நன்மை கருதி மாற்று சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பிலிருந்து அனைத்து புகையிரத சேவைகளையும் நாவற்குழியில் மட்டுபடுத்தி அவர்களை பேரூந்து மூலம் யாழ் புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் புகையிரத நிலையத்திலிருந்து விசேட புகையிரத சேவை மூலமாக காங்கேசன் துறைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பேரூந்து கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கேசன் துறையில் நான்கு விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசேட சேவை இலக்கம் 01
காங்கேசன் துறையிலிருந்து அதிகாலை அதிகாலை 5.00 மணிக்கு புறப்படும் புகையிரத சேவை யாழ்.புகையிரத நிலையத்திற்கு அதிகாலை 5.26 சென்றடைந்தவுடன் பேரூந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுட்டு, நாவற்குழியிலிருந்து அதிகாலை 6.16 இற்கு குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும்.
விசேட சேவை இலக்கம் 02
காங்கேசன் துறையிலிருந்து முற்பகல் 8.20 அளவில் புறப்படும் புகையிரத சேவை யாழ்.புகையிரத நிலையத்திற்கு முற்பகல 8.46 சென்றடைந்தவுடன் பேரூந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு, நாவற்குழியிலிருந்து முற்பகல் 9.45 அளவில் குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும்.
விசேட சேவை இலக்கம் 03
காங்கேசன் துறையிலிருந்து பிற்பகல் 12.50 அளவில் புறப்படும் புகையிரத சேவை யாழ்.புகையிரத நிலையத்திற்கு பிற்பகல் 1.16 இற்கு சென்றடைந்தவுடன் பேரூந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு நாவற்குழியிலிருந்து பிற்பகல் 2.12 அளவில் குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும்.
விசேட சேவை இலக்கம் 04
காங்கேசன் துறையிலிருந்து மாலை 5.45 அளவில் புறப்படும் புகையிரத சேவை யாழ்.புகையிரத நிலையத்திற்கு மாலை 6.11 இற்கு சென்றடைந்தவுடன் பேரூந்தின் மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுட்டு, நாவற்குழியிலிருந்து மாலை 7.11 அளவில் குறித்த புகையிர சேவை கொழும்பு புறக்கோட்டையை நோக்கி புறப்படும்.
(rizmira)