(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யுஎஸ் மிலேனியம் சவால்கள் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தமானது எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படமாட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
யுஎஸ் மிலேனியம் சவால்கள் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 480 மில்லியன் அமெரிக்கா டொலர் மானியத்தை பெற நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அண்மையில் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.