யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூருவது அவசியமே…

யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூருவது இந்நாட்டு மக்களின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கடுவெல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

மேலும், யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவது ​போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களையும் நினைவு கூறுவது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.