யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக த்ரிஷா…

குழந்தைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக நடிகை த்ரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலை, இலக்கியம், நிர்வாக துறைகளில் உள்ள பிரபலங்களை யுனிசெப் அமைப்பு ஆண்டு தோறும் தேர்வு செய்து நட்சத்திர அட்வகேட் அந்தஸ்தை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு நடிகை த்ரிஷா அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார். இதற்காக அவர் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார்.

விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா நடித்தார்.

இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் ‘யுனிசெஃபின் பிரபல தூதர்’ என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர்.