யுவராஜ்சிங் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டதன் பின்னணி

9–வது ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு முதற்கட்ட வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான முடிவுகள் நேற்றுடன் நிறைவுபெற்றன.
இதன் அடிப்படையில் யுவராஜ்சிங்கை தங்கள் அணியில் இருந்து டெல்லி டேர்டெவில்ஸ் நிர்வாகம் அதிரடியாக கழற்றி விட்டுள்ளது.

இது குறித்து டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறியதாவது, ‘யுவராஜ்சிங் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்.

ஆனால் எங்களது பட்ஜெட்டை கருத்தில் கொண்டே அவரை விடுவித்துள்ளோம். தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசினேன். அவர் பெரிய அளவில் வேதனைப்படவில்லை.

இதனால் எங்களுக்கு ரூ.23 கோடி மிச்சம் (இந்த தொகையை அடுத்த ஏலத்தில் பயன்படுத்தலாம்) ஆகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதே போல் அவுஸ்திரேலியாவின் ஜோர்ஜ் பெய்லி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக், மேற்கிந்திய அணி வீரர் டேரன் சேமி (இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இந்தியாவின் இஷாந்த் ஷர்மா (மூன்று பேரும் ஐதராபாத் சன் ரைசர்ஸ்), இந்தியாவின் பிரக்யான் ஓஜா, அவுஸ்திரேலியாவின் ஹாஸ்லேவுட், ஆரோன் பிஞ்ச் (மும்பை இந்தியன்ஸ்) உள்ளிட்டோரும் தங்களது அணி நிர்வாகங்களால் விலக்கப்பட்டுள்ளனர்.