(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்திய அணியின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்ந்த யுவராஜ் சிங், ஓய்வு முடிவை மீளப் பெற இருப்பதை உறுதி செய்துள்ளார்.
2007-ம் ஆண்டு இந்திய அணி இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தினையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ணத்தினையும் இந்தியா கைப்பற்ற முக்கிய நபராக திகழ்ந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததன் பின்னர் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை மீளப் பெற்றுள்ளார்.