யோகாசனம் செய்ய வேண்டும் என பயணி பிடிவாதம்; விமானம் திரும்பிச் சென்றது

அமெ­ரிக்­காவின் ஹவாய் தீவி­லி­ருந்து ஜப்­பானை நோக்கிப் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பய­ணி­யொ­ருவர் யோகா­சனம் செய்ய வேண்டும் என அடம்­பி­டித்­ததால் அவ்­வி­மானம் மீண்டும் ஹவாய்க்கு திருப்­பப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

அமெ­ரிக்­காவின் யுனைடெட் எயார்­லைன்­ஸுக்குச் சொந்­த­மான இவ்­வி­மானம், கடந்த சனிக்­கி­ழமை ஹவாய் தீவின் ஹொனோ­லுலு சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஜப்­பானை நோக்கிப் புறப்­பட்­டது.

இவ்­வி­மா­னத்தில் உணவு பரி­மா­றப்­பட்­ட­போது பய­ணி­களில் ஒரு­வ­ரான ஹையோங்டே பாயே என்­பவர் விமா­னத்தின் பின்­ப­கு­திக்குச் சென்று யோகா­ச­னத்­திலும் தியா­னத்­திலும் ஈடு­பட முயன்றார்.

மீண்டும் ஆச­னத்தில் அம­ரு­மாறு அவரின் மனைவி மற்றும் விமான ஊழி­யர்கள் கோரி­ய­போது அவர் ஆத்­தி­ர­ம­டைந்து மனை­வியை அப்பால் தள்­ளி­விட்டார்.

அவரை மீண்டும் ஆச­னத்தில் அமர வைப்­ப­தற்­கான முயற்சி பல­ன­ளிக்­கா­ததால் விமா­னத்தை மீண்டும் ஹவாய்க்கு திருப்­பு­வ­தற்கு விமா­னிகள் தீர்மானித்தனர்.

பின்னர் எவ்.பி.ஐ. அதிகாரிகளால்  ஹையோங்டே பாயே கைது செய்யப்பட்டார்.