முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித்த ராஜபக்ஷ இன்று(12) பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் ஒன்றை அளிக்க யோசித்தவுக்கு இன்று(12) நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னதாக, தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக யோசித்த இன்று அங்கு செல்லவில்லை என, அவரது சட்டத்தரணி பிரேமலால் சி.தொலவத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நிதி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(rizmira)