முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷவின் வெளிநாட்டு கடற்படை பயிற்சிக்காக 220 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 – 2010 ஆண்டு காலப்பகுதியில் உக்ரைன் நாட்டில் ஒரு பயிற்சிக்காகவும் பிரித்தானியாவில் 3 பயிற்சிகளுக்காகவும் இந்த தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நலின்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கயந்த கருணாதிலக இது தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.